மின்னஞ்சல் எனப்படும் இமெயில் வசதியை பயன்படுத்தாவர்களே இல்லை என சொல்லிவிடலாம். தகவல் பரிமாற்றங்கள்,பிடிஎப் வடிவிலான ஆவண பரிமாற்றங்களில் இ மெயிலே பயனர்கள் மத்தியில் இன்னனும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் அலுவல் பூர்வமான பயன்பாடுகளுக்கு அதிக அளவில் இந்த மின்னஞசல் சேவை பயன்படுத்தப்படுகிறது. இ மெயிலை பொறுத்தவரை கூகுளின் ஜி மெயில் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது அப்டேட்களும் இ மெயிலில் வெளியாகின்றன. அந்த வகையில், வாட்ஸ் அப் போலவே சில அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
வாட்ஸ்அப்பில் அனுப்பும் தகவல்களை ஒரு முறை மட்டுமே படிக்கும் வசதி இருப்பது போல, ஜிமெயிலிலும் பலருக்குத் தெரியாத ஒரு ரகசிய அம்சம் உள்ளது. அதுதான் கான்பிடென்ஷியல் (Confidential Mode). இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு காலாவதி நேரத்தை நிர்ணயிக்க முடியும். இமெயிலை பெறுபவர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும், அந்த மின்னஞ்சலை மீண்டும் திறந்து பார்க்க முடியாது.
அதுமட்டுமல்லாமல், அனுப்பியவர் விரும்பினால் எந்த நேரத்திலும் அந்த மின்னஞ்சலை ரத்து செய்ய முடியும். பாதுகாப்பை மேலும் அதிகரிக்க ஓ.டி.பி. அடிப்படையிலான வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் பெறுநரின் மொபைலுக்கு வரும் ஓ.டி.பி.யை உள்ளீடு செய்த பிறகே மின்னஞ்சலை படிக்க முடியும். வங்கி தகவல்கள், கடவுச்சொற்கள், ரகசிய ஆவணங்கள் போன்ற முக்கிய விவரங்களை பகிர வேண்டிய நேரங்களில் ஜிமெயிலின் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
• இமெயில் எழுதும் போது More Options (மேலும் விருப்பங்கள்) என்ற மெனுவைத் திறக்கவும்.
• அதில் Confidential Mode என்பதைத் தேர்வு செய்யவும்.
• அந்த மின்னஞ்சலுக்கான காலாவதி (Expiry) தேதியை குறிப்பிடவும்
• கூடுதல் பாதுகாப்பு வேண்டுமெனில் SMS Passcode வசதியைச் சேர்க்கவும்.