தென் ஆப்பிரிக்கா,
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனுக்கு (ஜிடிஏ 6) வீடியோ கேமை பரிசாக அளித்ததோடு வித்தியாசமான 4 நிபந்தனைகளையும் வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் தெப்ட் ஆட்டோ VI (Grand Theft Auto VI) (ஜிடிஏ 6) வீடியோ கேம் வரும் 19-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வனேசா என்ற பெண், தனது காதலன் லாங்காவிற்கு இந்த விளையாட்டின் கேம் கோட் மற்றும் வைஸ் சிட்டி போஸ்டரைப் பரிசாக வழங்கியுள்ளார்.
விளையாட்டைப் பரிசாக அளித்ததோடு மட்டுமல்லாமல், காதலன் அதிலேயே மூழ்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு நகைச்சுவையான ஒப்பந்தத்தையும் அவர் இணைத்துள்ளார். நவம்பர் 11-ம் தேதியிடப்பட்டு இருவரும் கையொப்பமிட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில், விளையாட்டை விளையாடுவதற்கான 4 முக்கிய விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
• விளையாடிக்கொண்டிருக்கும்போது குறைந்தபட்சம் சில மணி நேரங்களுக்கு ஒருமுறையாவது காதலியிடம் பேசி நலம் விசாரிக்க வேண்டும்.
• காதலி பேச வரும்போதெல்லாம் விளையாட்டை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
• தனது மொத்த நேரத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக விளையாட்டில் செலவிடக் கூடாது.
• விளையாட்டின் முதன்மைக் கதாபாத்திரமான லூசியா தனது உண்மையான காதலி அல்ல என்பதை நினைவில் கொண்டு, நிஜ வாழ்க்கைக் காதலிக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எட் என்ற பயனர் இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. "விளையாட்டைப் பரிசாக கொடுத்துவிட்டு, விளையாட விடாமல் தடுக்கும் சிறந்த திட்டம் இது" என பலரும் இதற்கு நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.