மாஸ்கோ,
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் மிருகக்காட்சி சாலையில் உள்ள பழைய பகுதியில் டைனா (Daina) என்ற 15 வயது பெண் பனிச்சிறுத்தை, எந்த மயக்க மருந்தும் இல்லாமல் தானாக முன்வந்து தனது ரத்த மாதிரியை எடுக்க அனுமதித்தது.
பனிச்சிறுத்தைகள் இயற்கையிலேயே மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை மற்றும் மனிதர்களை அவ்வளவு எளிதில் நெருங்க விடாது. அத்தகைய விலங்கு, தனது வாலை பிடித்து ஊசி போடும் அளவுக்கு மருத்துவர்களை நம்புவது என்பது அந்த பயிற்சியாளர்களின் நீண்ட கால உழைப்பை காட்டுகிறது.
15 வயதான டைனா, பயிற்சியாளர்களின் அறிவுறுத்தல்களை மிகச்சரியாகப் பின்பற்றி, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் ரத்த மாதிரியை எடுக்க அனுமதித்தது. இது மாஸ்கோ மிருகக்காட்சிசாலையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
டைனாவுடன் இருக்கும் 16 வயது ஆண் பனிச்சிறுத்தை உன்ட்சிக், இன்னும் முழுமையாக இந்த பயிற்சிக்குத் தயாராகவில்லை. ஊழியர்களின் கூற்றுப்படி, அது மெதுவாகவே முன்னேறி வருகிறது.
ஆரம்ப காலத்தில் பெயர் சொல்லி அழைத்தால் வருவது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அமைதியாக செல்வது மற்றும் இலக்கை பின்தொடர்வது போன்றவற்றை பனிச்சிறுத்தைகள் ஏற்கனவே கற்றிருந்தாகவும் தெரிவித்தது.
வயது முதிர்ந்த பனிச்சிறுத்தைகளுக்கு 15-16 வயது என்பது பனிச்சிறுத்தைகளுக்கு முதுமைக்காலம் அடிக்கடி உடல்நல பரிசோதனை தேவைப்படும். ஒவ்வொரு முறையும் மயக்க மருந்து கொடுப்பது அவற்றின் இதயத்திற்கும் கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பனிச்சிறுத்தை தானாக முன் வந்து ரத்தம் கொடுக்கும் முறை அவற்றின் ஆயுளை நீட்டிக்க உதவம் என கூறினார்.
மாஸ்கோ மிருகக்காட்சிசாலை தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு பனிச்சிறுத்தை இவ்வளவு ஒத்துழைப்புடன், மயக்க மருந்து இல்லாமல் ரத்த மாதிரி எடுக்க அனுமதித்தது இதுவே முதல்முறை என நிர்வாகம் மற்றும் அதன் செய்தி தொடர்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.