உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்

2021-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தலீபான் அரசை முறைப்படி ரஷியா மட்டுமே அங்கீகரித்து உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான் அரசின் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இன்று புறப்பட்டார். அவருடைய இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார்.

இதில், அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் பற்றி பேசப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரங்களை தலீபான் அமைப்பு கைப்பற்றிய பின்னர் தலீபான் அரசை முறைப்படி ரஷியா மட்டுமே அங்கீகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக அவருடைய இந்த பயணம் அமையும். இந்த பயணத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தக பரிமாற்றங்கள், உலர் பழ ஏற்றுமதிகள், சுகாதார துறை, தூதரக சேவைகள் மற்றும் பல்வேறு துறைமுகங்கள் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT