ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பல துறைகளில் கால்பதித்துள்ளது. ஏஐ-யை பயன்படுத்தி விரைவாகவும், துல்லியமாகவும் பணிகளை செய்ய முடிகிறது என்பதால் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக பிரபல ஐடி நிறுவனங்கள் ஏஐ-வை காரணம் காட்டி பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அமேசான், ஆரக்கிள் என உலகின் டாப் நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ளதால், ஐடி ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமாக மெட்டாவும் ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ ஆதிக்கம் காரணமாக, சுமார் 20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாம். 2025 டிசம்பர் நிலவரப்படி, மெட்டா நிறுவனத்தில் 79,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், சுமார் 15 ஆயிரம் பேர் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.