வாஷிங்டன்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில், தரையிறங்கத் தயாராகி கொண்டிருந்த விமானம் ஒன்று நடுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு கலிபோர்னியா கடலோர பகுதியில், ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் 1972 என்ற விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்து கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாக, விமானத்தால் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளானது. நடுவானில் விமானம் நிலைதடுமாறி ஆட்டம் கண்டதால், விமானத்திற்குள் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர்.
விமானியின் சாதுரியமான நடவடிக்கையால், தரையிறங்கும் முயற்சியை கைவிட்டு விமானம் உடனடியாக மீண்டும் வானத்தை நோக்கி செலுத்தப்பட்டது. இந்த துரித நடவடிக்கையால், ஏற்படவிருந்த பெரும் விமான விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
இந்த திகிலூட்டும் சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.