* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற ஏமனில், மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதற்கு உடனே அனுமதிக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* ஈராக்கில் நினிவே, அன்பார் மாகாணங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைத்திருந்த பாதாள சுரங்கங்களையும், 500 ராக்கெட்டுகளையும் ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பிடித்துள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 150 வீடுகள் எரிந்து நாசமாகி விட்டன. 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு தீ பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து, இதுபற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஜனாதிபதி டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரிடம் மூடிய அறையில் வைத்து விசாரணை நடந்தது. அவருக்கும் ரஷிய வக்கீல் நாடாலியாவுக்கும் இடையே 2016-ம் ஆண்டு நடந்த சந்திப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.