உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

சீனாவில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் நீதித்துறை மந்திரி வூ ஐயிங், ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

* ஈராக்கில் எண்ணெய் வளமிக்க கிர்குக் நகரின் முக்கிய சந்திப்பில் இருந்து குர்து போராளிகள் படை விலகிக்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டின் துணை ராணுவம் எச்சரித்தது. ஆனால் அதை குர்து போராளிகள் படை நிராகரித்து விட்டது.

* நேபாள நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆனாலும் இது உலகளாவிய எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற ஈரான் எண்ணெய் வளத்துறை மந்திரி பிஜான் ஜாங்கனே கூறி உள்ளார்.

* சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள தச்சு பட்டறை ஒன்றில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் ஜாமீனுக்காக வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான ஜாமீன்தாரர் பிணைப்பத்திரங்களை இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு பறிமுதல் செய்துள்ளது.