பீஜீங்,
ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) அமைப்பின் 33-வது மாநாடு, வரும் 18-ந்தேதி(இன்று) மற்றும் 19-ந்தேதி(நாளை) ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. 21 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் குவாங்டொங் மாகாணம் சென்சென் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று சீனா சென்றுள்ளார். முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடைபெற்ற ‘குவாட்’ உச்சிமாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அதிபர் டிரம்ப் தனது பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து, அங்கிருந்து சீனா புறப்பட்டு சென்றார். சீனாவில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் டிரம்ப் ஆகிய மூவரும் சந்தித்து பேச உள்ளனர்.
டிரம்பின் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கை அடிப்படையிலான வரி உயர்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள், பசிபிக் பிராந்தியத்தில் தடையற்ற வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் APEC அமைப்பின் நோக்கத்திற்கு முரணாக உள்ளன. இந்த சூழலில் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷிய அதிபர்களிடையே நடைபெற உள்ள சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.