உலக செய்திகள்

ஹார்முஸ் நீரிணை வழியாக விரைவில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் - ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

இந்த பிரச்சினையில் சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

நியூயார்க்,

ஐ.நா. பொதுச்சபையில், 'மத்திய கிழக்கு நிலவரம்' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிக கப்பல்கள் ராணுவ தாக்குதலுக்கு இலக்காவது கண்டிக்கத்தக்கது. இதனால் அப்பாவி கப்பல் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிக கப்பல்கள் ராணுவ தாக்குதலுக்கு இலக்காவது கண்டிக்கத்தக்கது. இதனால் அப்பாவி கப்பல் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.