உலக செய்திகள்

ரஷியாவில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

மலையேற்ற வீரர்கள் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மாஸ்கோ,

ரஷியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.

ரஷியாவின் வட காகசஸ் மாகாணத்தில் மிஷிர்ஹி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று முன் தினம் 33 மலையேற்ற வீரர்கள் ஏறியுள்ளனர்.

பனிச்சரிவு - 11 பேர் பலி

அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் மாயமாகினர். எஞ்சிய 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேவேளை, இந்த பனிச்சரிவை தொடர்ந்து மாயமான 6 பேரை தேடும் பணியில் 50 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT