உலக செய்திகள்

அமெரிக்கா முழுவதும் விமானப் புறப்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருத்த தடை 4 மணி நேரத்திற்குப் பிறகு நீக்கம்

அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இன்று திடீரென நிறுத்தப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி ஒரே நேரத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பு கோளாறு காரணமாக விமானங்களின் புறப்பாடு மொத்தமாக நிறுத்தப்பட்டது. அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கிய நிலையில், 4 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து புறப்படும் விமானங்கள் இன்று திடீரென நிறுத்தப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி ஒரே நேரத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அமெரிக்காவில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் மட்டும் வந்து இறங்கின.

பயணிகள் அவதி

ஆனால் புறப்பட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிட்டதா? என பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது. இந்த திடீர் தடையால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சைபர் தாக்குதலா?

சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு விமானங்கள் புறப்படுவதற்கான தடை நீக்கப்பட்டது. இருப்பினும், விமானங்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் விமான சேவைகள் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தகவல் தொடர்பு கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதல் கட்ட தகவலின் படி, சைபர் தாக்குதலுக்கான அறிகுறிகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT