உலக செய்திகள்

பிம்ஸ்டெக் மாநாடு: இந்திய பயணத்தை தவிர்க்கும் வங்காள தேச உள்துறை மந்திரி

ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்காளதேசம் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த மாநாட்டை வங்காளதேச மந்திரி புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் வங்காள தேச உள்துறை மந்திரி பங்கேற்கவில்லை.

இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடு களை உறுப்பினர்களாக கொண்ட 'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பின் முதலாவது மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பிராந்திய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேற்கண்ட நாடுகளின் உள்துறை மந்திரிகள் பங்கேற்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. ஆனால் இதில் பங்கேற்காமல் தவிர்க்க வங்காளதேச உள்துறை மந்திரி சலாவுதீன் அகமது முடிவு செய்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் சுமுக மற்ற உறவுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த மாநாட்டில், மூத்த அதிகாரி மன்சூர் மோர்ஷெத் சவுத்ரி தலைமையிலான தூதுக்குழு வங்காளதேசம் சார்பில் பங்கேற்கிறது.

கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்ததைத் தொடர்ந்து இந்தியா- வங்காளதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற் பட்டது.

ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்காளதேசம் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த மாநாட்டை வங்காளதேச மந்திரி புறக்கணித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், அந்நாட்டு பிரதமர் தாரிக் ரஹ்மான் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT