துபாயில் பீமா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான 'சூப்பர் உமன்' திட்டத்தின் ஒரு பகுதியாக பீமா சூப்பர் உமன் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் தனது முதலாம் ஆண்டு நிறைவை அமீரகத்தில் கொண்டாடுகிறது.
இந்த மன்றத்தின் சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமூகத்தில் உள்ள பெண்களுக்கு தகவல் தொடர்பு திறன், தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன் ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பெண்களுக்கு ஆதரவளிக்கும் இரு வலுவான சமூக வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிகமாக இணைந்துள்ளனர்.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு வருகிற 23 ந் தேதி காலை 10 மணிக்கு துபாய் அல் கிஸ்சஸ் பகுதியில் உள்ள அல் தவார் நூலகத்தின் அரங்கம் 2-ல் ஓபன் ஹவுஸ் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்பின் நிர்வாகிகள் டீவீ அல்காசோயஸ், ஹரீஷ் கிரிஷ்ணன், ஏ.எல்.டேவி மற்றும் முகம்மது ஆஷிஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமீரகத்தில் வசிக்கும் பெண்கள் வரவேற்கப்படுகின்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னம்பிக்கை, பொது மேடைகளில் பேசுவது, தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவது குறித்து அறிந்துகொள்ளலாம். இதில் கலந்துகொள்ள https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhWBWrk4oIHMXSMq9I5g9gEmg6hy3PLdv0dehnxxNz7YRhSg/viewform என்ற படிவத்தில் அல்லது +971 55 492 1609 என்ற செல்போன் எண்ணில் அழைத்து பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விருந்தினராக வருகை புரிந்து தன்னம்பிக்கையுடன் கூடிய பெண்ணாக செல்லுங்கள்.