புக்ச்ரெஸ்ட்,
கருங்கடலில் சென்ற சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மாலுமி உயிரிழந்தார்.
ரஷியா, உக்ரைன், துருக்கி, ருமேனியா, ஜார்ஜியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்ட சிறிய கடல் கருங்கடல் ஆகும்.
ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியிலும், மேற்கு ஆசியாவிலும் அமைந்துள்ள இந்த கடல் 4 புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது.
இதனிடையே, கருங்கடலில் இன்று காலை 10 மணியளவில் சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 10 உக்ரைனியர்கள், 3 அசர்பைஜான் நாட்டினர் என மொத்தம் 13 மாலுமிகள் பயணித்தனர்.
இந்நிலையில், ருமேனியாவின் கான்ஸ்டண்டா நகரில் இருந்து 13 நாடிகல் மைல் தொலைவில் கருங்கடலில் சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து அறிந்த ருமேனியா கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும், இந்த தீ விபத்தில் மாலுமி உயிரிழந்தார். மேலும், 3 மாலுமிகள் மாயமாகினர். மாயமான 3 மாலுமிகளை தேடும் பணி துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.