உலக செய்திகள்

ஜிபவுதியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 139 ஆக உயர்வு; 84 பேர் மாயம்

படகில் இருந்தவர்களில் 82 பேர் உயிர் பிழைத்தனர். ஆனால், பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

ஜெனீவா

ஜிபவுதியில் படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்து உள்ளது.

ஜிபவுதி நாட்டில் இருந்து ஏமனை நோக்கி 305 பேருடன் படகு ஒன்று சென்றது. ஜிபவுதியில் ஓபக் என்ற பகுதிக்கு வடக்கே கியூஹியர் பகுதியருகே இரவில் திடீரென்று கவிழ்ந்தது. இதனால், படகில் பயணம் செய்தவர்கள் பயத்தில் அலறினர்.

இந்த விபத்தில், படகில் இருந்தவர்களில் 82 பேர் நீந்தி, கரையேறி உயிர் பிழைத்தனர். ஆனால், பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

139 ஆக உயர்வு

இந்நிலையில், ஐ.நா. புலம்பெயர்வோர் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜிபவுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 109-ல் இருந்து 139 ஆக உயர்ந்துள்ளது. 30 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதில், விபத்தில் சிக்கியவர்களில் 84 பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT