உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள்: 2 பேர் பலி; 3 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் மேற்கே காபூல் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் குடிமக்களில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி அதிகாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் மேற்கே காபூல் நகரில் கிசாக் என்ற பகுதியில் ஈராக்கிய காவல் பணி ஆள் தேர்வு மையத்தில் கார் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் குடிமக்களில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதேபோன்று, காபூல் நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து உள்ளார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.