ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத் தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி (வயது 86) படுகொலை செய்யப்பட்டார்.34 ஆண்டுகளாக, ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு தலைமை பொறுப் பில் இருந்து காமேனி வழிநடத்தி வந்தார்.
தலைவரை இழந்த கோபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மறுபுறம் ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்தன. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த போரால் ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கானோர் உயிரி ழந்தனர்.40 நாட்கள் தீவிர தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பிப்ரவரி28-ந்தேதி காமேனி இறந்திருந்தாலும், தொடர் மோதல்களால் அவரது இறுதி ஊர்வலம் நடத்தப்படவில்லை. காமேனியின் இறுதிச்சடங்குக்காக அமைதி பேச்சுவார்த்தையை ஒருவாரத்துக்கு ஒத்திவைக்க ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காமேனியின் இறுதிச்சடங்கு கடந்த வாரம் 4-ந்தேதி தொடங்கி 6 நாட்களாக நடந்தது. இதில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகள் இதனை புறக்கணித்தன. காமேனி மற்றும் உயிரிழந்த அவரது குடும்பத்தினரின் உடல்கள் தெஹ்ரான், கோம், நஜாப் மற்றும் கர் பலா ஆகிய நகரங்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலத்தில், அயதுல்லா அலி கோமனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.