உலக செய்திகள்

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் டிராவிஸ் எட்வர்ட் மார்ட்டின் (37). இவர் வென்ச்சுரா கவுண்டி மற்றும் ஆரஞ்சு கவுண்டியில் 2019-ம் ஆண்டு 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது 2021-ம் ஆண்டு வரை தொடர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன், ஆபாசப்படங்கள் தயாரிக்க ஒரு குழந்தையை பயன்படுத்தியதாகவும், குழந்தை ஆபாசப் படங்கள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளில் மாட்டினுக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT