உலக செய்திகள்

கனடா: ராணுவ தளத்தில் பயங்கர வெடி விபத்து - 7 பேர் பலி?

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கனடா.

ஒட்டோவா,

கனடாவில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கனடா. அந்நாட்டின் அல்பர்டா மாகாணம் வைன்ரைட் நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

7 பேர் பலி?

இந்நிலையில், வைன்ரைட் நகரில் உள்ள ராணுவ தளத்தில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குண்டு வீச்சு பயிற்சியின்போது இயற்கை எரிவாயுக்குழாய் மீது வெடிகுண்டு விழுந்ததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த வெடி விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT