உலக செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்... கடலில் மிதக்கும் ஐபோன்கள்

ஈரான் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன

தெஹ்ரான்,

ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கண்டெய்னரில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய பாட்டில்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன இதனால் அங்கு .தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் 2500 கப்பல்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் கடலில் தீ பற்றி எரிந்துள்ளது.

அதில் கடலில் கண்டெய்னர்கள் மூழ்கி கிடப்பதோடு, கடல் தண்ணீரில் வாசனை திரவியங்கள், ஐபோன்கள் உள்ளிட்டவை மிதக்கின்றன. அதனை பொதுமக்கள் சிறிய கப்பல்களில் சென்று மொத்தம் மொத்தமாக அள்ளி செல்கின்றனர்.

SCROLL FOR NEXT