உலக செய்திகள்

பாகிஸ்தானில் சோதனை சாவடியில் தாக்குதல்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சோதனை சாவடி ஒன்றில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு வீரர்கள் தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் யாரும் உள்ளனரா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT