லண்டன்,
லண்டன் சில்வர் ஸ்டோன் மைதானத்தில் அஜித்குமார் பங்கேற்ற le mans கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நடிகரும் அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்-அமைசர் விஜய் பிரிட்டனில் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டி. இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது.
முன்னதாக, இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அஜித்தின் கார் மீது அமர்ந்து விஜய் போட்டோ எடுத்தார். பின், அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் முதல்-அமைச்சர் விஜய். இதுதொடர்பான காணொலிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுபற்றி அஜித் குமார் பேசுகையில், ”முதல்-அமைச்சர் விஜய் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அவர் முதல்-அமைச்சரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்து வருகிறார். எனது அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.