உலக செய்திகள்

“சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது” - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

காணொலி காட்சி வழியாக நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 2ஆம் உலகப் போருக்கு பிறகு உலக நாடுகள் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். சீனா, தனது நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கொரோனாவை உலகிற்கு பரப்பி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டதாகவும் சாடினார்.

உலக சுகாதார நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தவறான தகவல்களை சீனா வெளியிட்டதாகவும் அவர் கூறினார். மேலும் சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாகவும், சீனாவின் இத்தகைய செயல்களுக்கு ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்