உலக செய்திகள்

சீனா அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு

சீனாவின் அணு ஆயுத உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய மறுநாளே, சீனாவின் அணு ஆயுத வளர்ச்சி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது: சீனா அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அணு ஆயுத எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு இணையாக சீனா வந்துவிடும். அந்த அளவுக்கு சீனாவின் அணு ஆயுத உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, 2024-ம் ஆண்டு இறுதியில் சீனாவிடம் 600-க்கும் சற்று அதிகமான அணு ஆயுதங்கள் இருந்துள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சீனாவின் ஷென்சென் நகரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அணு ஆயுதப் பெருக்கத்தைத் தடுப்பது, அணு ஆயுதப் போர் அபாயத்தைக் குறைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.அணு ஆயுதப் போரை வெல்ல முடியாது, அத்தகைய போர் ஒருபோதும் நடத்தப்படக்கூடாது என்றும் மூன்று நாடுகளின் தலைவர்களும் கூட்டறிக்கையில் உறுதியளித்தனர்.

SCROLL FOR NEXT