உலக செய்திகள்

அதிநவீன செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

சீனா தனது புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது.

பீஜிங்,

சீனாவின் வடக்கு மாகாணமான ஷான்சியில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து, புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்களை சீனா நேற்று (வியாழக்கிழமை) விண்ணில் ஏவியது.

'லாங் மார்ச்-6'

விண்வெளித் துறையில் உலக நாடுகளுக்கு சவால் விடுத்து வரும் சீனா, தனது புதிய அதிநவீன தகவல் தொடர்பு சோதனை செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, மேம்படுத்தப்பட்ட 'லாங் மார்ச்-6' ராக்கெட் மூலம் நேற்று காலை இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

அதிவேக செயற்கைக்கோள் தகவல் தொடர்பு

திட்டமிட்ட சுற்றுப்பாதையில் கச்சிதமாக நிலைநிறுத்தப்பட்ட இவை, அதிவேக செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தரவு பரிமாற்றச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், 'லாங் மார்ச்' ராக்கெட் வரிசையில் இது 660-வது வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணமாகும்.