பெய்ஜிங்,
பஞ்சாப் மாநிலம் பதான் கேட்டில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய உடனேயே, அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதம் அனுப்பி இருந்தது. மேலும் தாக்குதல் தெடர்பான வலுவான ஆதாரங்களையும் இணைத்திருந்தது.இந்தியா அளித்திருந்த அந்த ஆதாரங்களில் உள்ள தெழில்நுட்ப சாதகங்களை ஆராய்ந்த ஐ.நா. குழு இது பற்றி உறுப்பு நாடுகளின் கருத்துகளை கேட்டிருந்தது. தடை விதிப்பது குறித்து எந்த நாடும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவர் மீது தடை விதிக்க ஐ.நா ஆயத்தமானது.
இந்த சூழலில் கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, இந்த விவகாரத்தை நிறுத்தி வைக்கும்படி ஐ.நா குழுவிடம் வீட்டே அதிகாரம் கெண்ட சீனா கேட்டுக் கெண்டது. இதையடுத்து மசூத் அசார் மீதான தடையை ஐ.நா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இந்தியாவின் முயற்சிக்கு அப்போது பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சீன பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜாவோ கேஹி, டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உள்நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அதன் அடிப்படையில், ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேசமயம், இந்த சந்திப்பின் போது மசூத் அசார் குறித்த கோரிக்கையை இந்தியா மீண்டும் முன்வைத்தது. இது தொடர்பாக, சீன வெளியுறவுத்துறை செய்தியாளரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறும் போது, மசூத் அசாரை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக இந்தியா கோரிக்கை வைத்த விவகாரத்தில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை பலமுறை தெரிவித்து விட்டோம். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரையில், சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தடுப்பு நடவடிக்கைகளில் சீனா எப்போதும் பங்கெடுத்து வருகிறது. இந்த நிலையில் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரதன்மையை நிலை நாட்டுவதற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை சீனா தொடரும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.