பீஜிங்,
தென்சீன கடல் பகுதி மற்றும் பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, தென்சீன கடல் பகுதியில் அவ்வப்போது போர் ஒத்திகை, கடற்படை பயிற்சி, ஏவுகணை சோதனைகளை சீனா நடத்தி வருகிறது.
இதனால் சீனாவின் அண்டை நாடுகள், தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தென்கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளும் அச்சுறுத்தலை சந்திப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், அணு ஆயுத வல்லமைபெற்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுணையை ஏவி சீனா இன்று சோதனை நடத்தியுள்ளது. தென் பசிபிக் கடலில் இந்த சோதனையை சீனா நடத்தியுள்ளது. இந்த சோதனைக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.