உலக செய்திகள்

காட்டில் துளிர்த்த இரக்கம்; மான் குட்டியை காப்பாற்றிய யானை: வைரலான வீடியோ

வீடியோவை 20 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

நியூயார்க்,

காட்டில் வசிக்கும் விலங்குகள் தப்பி பிழைப்பதே பெரிய விசயம் என்ற அளவில் அதன் வாழ்க்கை அமைந்திருக்கும். அதில், இரக்கத்திற்கு என எந்தவித தனி இடமும் இருக்காது. எந்நேரமும் ஆபத்து தொடரலாம் என்ற சூழலே அதிகம் காணப்படும்.

ஆனால், இயற்கையில் சில அற்புதங்களும் நடக்கும் என வெளிப்படும் வகையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில், மான் கூட்டம் ஒன்று காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்த மான் குட்டி ஒன்று பிரிந்து தனியாக சென்றபோது, குளத்திற்குள் விழுந்து விட்டது.

வெளியே எப்படி வருவது என அதற்கு தெரியாமல் தவித்து கொண்டிருந்தது. அப்போது, இதனை கவனித்த யானை ஒன்று, மெதுவாக சென்று தும்பிக்கையை கொண்டு, மான் குட்டியை வெளியேற்றி விட பல்வேறு முறை முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அதனால் வெளியே வர முடியவில்லை. இறுதியாக அதனை தூக்கி விட்டு, கரை சேர்த்தது.

அந்த மான் குட்டி தரைக்கு வந்ததும், தன்னுடைய கூட்டத்தில் சென்று இணைந்து கொண்டது. வனத்தில் இதுபோன்ற அற்புத காட்சிகளும் காண கிடைக்கும் என்பது போல் அந்த வீடியோ அமைந்திருந்தது.

இந்த வீடியோவை 20 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

View this post on Instagram

SCROLL FOR NEXT