உலக செய்திகள்

உலகளவில் 4 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் 4 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 3 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது உகான் நகர கடல்வாழ் உயிரின மாமிச சந்தை ஆகும்.

இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.02 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 3.01 கோடி பேர் குணமடைந்த நிலையில் 11.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.