உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 46.66 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51.27 கோடியாக உயர்ந்து உள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 98 லட்சத்து 71 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 66 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் உயிரிழந்து உள்ளனர்.

SCROLL FOR NEXT