கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் 49.91 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44.84 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜெனிவா,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,91,32,359 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,84,52,890 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,44,76,147 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,03,322 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,20,62,989, உயிரிழப்பு - 10,12,151, குணமடைந்தோர் - 7,99,08,520

இந்தியா - பாதிப்பு - 4,30,36,070, உயிரிழப்பு - 5,21,722, குணமடைந்தோர் - 4,25,02,454

பிரேசில் - பாதிப்பு - 3,01,52,402, உயிரிழப்பு - 6,61,309, குணமடைந்தோர் - 2,90,38,896

பிரான்ஸ் - பாதிப்பு - 2,69,47,375, உயிரிழப்பு - 1,43,288, குணமடைந்தோர் - 2,40,18,051

ஜெர்மனி - பாதிப்பு - 2,26,79,247, உயிரிழப்பு - 1,32,311, குணமடைந்தோர் - 1,84,14,600

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,15,49,830

ரஷியா - 1,79,96,060

தென்கொரியா - 1,54,24,598

இத்தாலி - 1,52,92,048

துருக்கி - 1,49,58,974

ஸ்பெயின் - 1,16,27,487

வியட்நாம் - 1,01,98,236

அர்ஜெண்டீனா - 90,52,536

நெதர்லாந்து - 79,71,855

ஈரான் - 71,91,643