உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அறிவியல் நிபுணர்

உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் டாக்டர் குதுப் மஹ்மூத், ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. இந்திய தடுப்பூசிகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 60 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்திய சுகாதாரத்துறை மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் இந்த நடவடிக்கை கொண்டாடப்படுவதற்கு உரிய சிறந்த சாதனை.

கொரோனா ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸ் ஆகும், ஏனெனில் இது மிக அதிக மாறுதல்களை கொண்டுள்ளது. கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஆண்டில் தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் நாம் வெளிவருவோம் என்று நம்புகிறேன். அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு டாக்டர் குதுப் மஹ்மூத் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு