உலக செய்திகள்

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு; டிரம்ப், புதின், ஜின்பிங் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த 3 தலைவர்கள் இடையே நடந்த முத்தரப்பு சந்திப்பு நேற்று ஷென்சென் நகரில் நடந்தது.

ஷென்சென்,

உக்ரைன், ஈரான் போர்கள், ஹர்முஸ் நீரிணை மூடலால் கச்சா எண்ணெய் வினியோக தடை உள்ளிட்ட புவிசார் அரசி யல் குழப்பங்களுக்கு மத்தியில் உலகின் முப்பெரும் வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக சந்தித்து பேச முடிவு செய்தனர்.

இதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று முன்தினம் சீனா வந்தடைந்தனர். அவர்களை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார்.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த 3 தலைவர்கள் இடையே நடந்த முத்தரப்பு சந்திப்பு நேற்று ஷென்சென் நக ரில் நடந்தது. ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த பேச்சுவார்த்தையில் அணு ஆயுத பரவல் குறைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, ஐ.நா. சீர்திருத்தம் போன்ற சர்வதேச விவகாரங்கள் குறித்து தலைவர்களும் விவாதித்தனர்.

அணு ஆயுத பரவல் குறைப்பு, பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு, ஐ.நா. சீர்திருத்தம் போன்றவை தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.

SCROLL FOR NEXT