கோப்பு படம் (AP) 
உலக செய்திகள்

பாரசீக வளைகுடாவில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உள்பட 4 பேர் காயம்

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச கடல் போக்குவரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

பாரசீக வளைகுடா பகுதியில் துபாய் நோக்கி சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது மர்மப் பொருள் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். இதில் இந்தியர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

லைபீரியா நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்.டி. புஜைரா எனர்ஜி' என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பல், கடந்த 10-ந்தேதி அல் ருவைஸ் பகுதியில் இருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பாரசீக வளைகுடா பகுதியில் கப்பல் மீது மர்மப் பொருள் ஒன்று தாக்கியது.இந்த கப்பலில் 6 இந்தியர்கள் உள்பட மொத்தம் 22 மாலுமிகள் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் இந்தியர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பு

மீதமுள்ள 18 மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். அவர்களில் காயமடையாத 5 இந்திய மாலுமிகளும் அடங்குவர்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கப்பலில் உள்ள மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச கடல் போக்குவரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

SCROLL FOR NEXT