ப்ரெட் ப்ளைடன் 
உலக செய்திகள்

30 வினாடிகளில் 22 முறை பின்னோக்கி பல்டி!! கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்த நெதர்லாந்து வாலிபர்!

உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பொறிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ப்ரெட் ப்ளைடன் நீண்ட நாட்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

நெதர்லாந்து,

நெதர்லாந்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், நின்ற இடத்திலேயே 30 வினாடிகளில் 22 முறை பின்னோக்கி பல்டி அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த அசாத்திய சாகசம் 2027-ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

காற்றில் சுழன்ற வாலிபர்

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ப்ரெட் ப்ளைடன் என்ற வாலிபர், சிறு வயது முதலே அக்ரோபாட்டிக்ஸ் மற்றும் சாகச கலைகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர், உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பொறிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நீண்ட நாட்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.அதன்படி, வாலிபர் நின்ற நிலையில் அதிவேகமாக பின்னோக்கி பல்டி அடிக்கும் சவாலை அவர் எதிர்கொண்டார்.

30 வினாடிகளில் அற்புதம்

வழக்கமாக ஒருமுறை பின்னோக்கி பல்டி அடிப்பதற்கே மிகுந்த உடல் வலிமையும், தலைசுற்றல் இல்லாமல் சமநிலையை காப்பதும் அவசியமாகும். ஆனால் ப்ரெட் ப்ளைடன், கண் இமைக்கும் நேரத்திற்குள் காற்றில் புயல் வேகத்தில் சுழன்று அடுத்தடுத்து பல்டிகளை அடித்தார். இறுதியில், சரியாக 30 வினாடிகளில் நின்ற நிலையிலேயே 22 முறை பின்னோக்கி பல்டி அடித்து அசத்தினர்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்

இவரது இந்த அதிவேக பல்டி சாகசத்தை முழுமையாக அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு, இதனை புதிய உலக சாதனையாக அறிவித்து அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கியுள்ளது. காற்றோடு போட்டி போட்டுக்கொண்டு இந்த வாலிபர் நிகழ்த்திய அசுர சாகசத்தின் புகைப்படம் தற்போது நெட்டிசன்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

SCROLL FOR NEXT