உலக செய்திகள்

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு இடையே ஈரானை தாக்கிய நிலநடுக்கம்

ஈரான் மீது நடந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஜெராஷ்

ஈரானின் தெற்கே பார்ஸ் மாகாணத்தில் ஜெராஷ் நகரில் இருந்து வடமேற்கே 52 கி.மீ. தொலைவில் இன்று மதியம் 12.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இதேபோன்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி, பாதுகாப்பு மந்திரி உள்பட 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்த சூழலில் நிலநடுக்கமும் தாக்கி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

SCROLL FOR NEXT