காபூல்,
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.52 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
185 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.389 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.665 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.