உலக செய்திகள்

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

மாலை 4.39 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பீஜிங்,

சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் சடோய் நகரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை 4.39 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வியாழக்கிழமை தீபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT