உலக செய்திகள்

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு..!

காலை 9:15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜின்ஜியாங்

வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9:15 (இந்திய நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

200 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.88 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.56 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 

SCROLL FOR NEXT