உலக செய்திகள்

துருக்கியில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு

துருக்கி நாட்டின் காசிபாசா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காசிபாசா,

துருக்கி நாட்டின் காசிபாசா நகரில் இருந்து தென்மேற்கே 49 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 82.05 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை.