உலக செய்திகள்

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

துசான்பே,

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று, அதிகாலை 1.56 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. மேலும், இன்று காலை திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 5.52 மணியளவில் ரிக்டர் 3.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.