கின்ஷாசா,
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாட்டிலும் பரவி வருகிறது.
இந்நிலையில், காங்கோவில் 2,536 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 1033 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, உகாண்டாவில் 20 பேருக்கு எபோலா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.