உலக செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்போர்டு ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம்,

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் சபை நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் நிகழ்வு கடந்த 5ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய 5 துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்போர்டு ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அதிர்ச்சிகளை அரசுகள், மத்திய வங்கிகள் சமாளிப்பதற்கான நெறிமுறைகளை வகுத்ததற்காக ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்போர்டு ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT