உலக செய்திகள்

எகிப்து: 2 பயணிகள் ரெயில் மோதல்; 4 பேர் பலி

இந்த தகவல் அறிந்து, அவசரகால பொறுப்பு படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கெய்ரோ

எகிப்து நாட்டில் 2 பயணிகள் ரெயில் மோதியதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகருக்கு தெற்கே 76 கி.மீ. தொலைவில் பயணிகள் ரெயில் மோதிய சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

பயணிகள் ரெயில்

இதுபற்றி அரசு ரெயில்வே கழகம் வெளியிட்டுள்ள தகவலில், கெய்ரோ நகரில் இருந்து அஸ்வான் நகர் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கிசா நகரில் இருந்து பயூம் நகர் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று வந்தது. அது, அஸ்வான் நோக்கி சென்ற ரெயிலின் பின்னால் மோதி விபத்தில் சிக்கியது.

4 பேர் பலி

இந்த விபத்தில், ரெயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. ரெயிலுக்குள் பலர் சிக்கி கொண்டனர். சம்பவத்தில், 4 பேர் பலியானார்கள். 150 பேர் வரை காயமடைந்தனர்.

இதனால், அந்த பகுதியில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து, அவசரகால பொறுப்பு படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் மற்றும் சேத பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT