உலக செய்திகள்

எல்நினோ எதிரொலி: ஆஸ்திரேலியாவில் நெருப்பு மூட்டுவதற்கு தடை

சிட்னி நகரில், நேற்று கடுமையான வெயில் சுட்டெரித்தது.

கான்பெரா,

வழக்கமாக வசந்த காலத்தில் இதமான வானிலையே நிலவ வேண்டும். ஆனால், உலகின் மிக முக்கிய நாடான ஆஸ்திரேலியாவில் இப்போதே கோடைக்காலம் போல வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. இது அந்நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை அதிகம் கொண்ட சிட்னி நகரில், நேற்று கடுமையான வெயில் சுட்டெரித்தது. வழக்கமான சராசரி வெப்பநிலையை விட 13 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி, 33 டிகிரி வரை வெயில் வாட்டியது.

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த 'எல் நினோ' காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடும் வறட்சியும், பலத்த காற்றும் வீசுவதால் பயங்கர காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உரு வாகியுள்ளது. இதையடுத்து, சிட்னி முழுவதும் நெருப்பு மூட்டுவதற்கு தீயணைப்புத் துறையினர் அதிரடியாக தடை விதித்துள்ளனர்.

SCROLL FOR NEXT