உலக செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக யானைகள் வேட்டை: வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு

உலகிலேயே அதிக எண்ணிக்கையில், சுமார் 1.3 லட்சம் யானைகள் வாழும் நாடாக போட்ஸ்வானா உள்ளது.

கபரோன்:

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா தனது 60-வது சுதந்திர தினத்தை கடந்த 30-ந்தேதி கொண்டாடியது. இதையொட்டி நடைபெற்ற கொண்டாட்ட விருந்துக்காக 23 யானைகளை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையில், சுமார் 1.3 லட்சம் யானைகள் வாழும் நாடாக போட்ஸ்வானா உள்ளது. கிராமப்புற மக்களுக்கு யானை இறைச்சியை வழங்குவதற்காக இந்த யானைகளை வேட்டையாட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு

யானைகளை கொல்வதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யானைகளை வேட்டையாடுவது எஞ்சியுள்ள யானைகளை ஆக்ரோஷமடையச் செய்து, மனித-விலங்கு மோதலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் திட்டமிட்டபடி யானைகள் வேட்டையாடப்பட்டு, அவற்றின் இறைச்சி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT