உலக செய்திகள்

உலகில் எந்த இடத்திலும் எதிரிகளுக்கு பாதுகாப்பு இருக்காது-ஈரான் பகிரங்க எச்சரிக்கை

போரை நிறுத்தும் தந்திரமாக மத்திய கிழக்கை தாண்டியும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போவதை ஈரான் சூசகமாக தெரிவித்துள்ளது

டெஹ்ரான்

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் 21 நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், போரை நிறுத்தும் தந்திரமாக மத்திய கிழக்கை தாண்டியும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போவதை ஈரான் சூசகமாக தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவ மூத்த செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி, இதுதொடர்பாக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரான் எதிரிகளை பற்றி எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பூங்காக்கள், பொழுதுபோக்கு பகுதிகள், சுற்றுலா தலங்கள் என உலகத்தில் எந்த இடமும் இப்போது இருந்து அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT