புதுடெல்லி
வெடிகுண்டு மிரட்டல்களை விடுவதற்காக, போலியாக 5 லட்சம் ஜி-மெயில் கணக்குகளை பயன்படுத்தியது பற்றி கூகுளிடம் இந்திய போலீசார் விசாரிக்க உள்ளனர்.
அமெரிக்காவின் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் மிக பெரிய பயனாளர் சந்தைகளுக்கான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனினும், அதனை சில கும்பல்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன. இதுபற்றி இந்திய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத்தில் இருந்து செயல்பட கூடிய கும்பல் ஒன்றின் இ-மெயில் நெட்வொர்க் பற்றி போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வந்துள்ளதுடன், அதற்காக 5 லட்சத்து 13 ஆயிரத்து 847 போலி ஜி-மெயில் ஐ.டி.களையும், பாஸ்வேர்டுகளையும் உருவாக்கி வைத்துள்ளனர்.
2022-ம் ஆண்டு முதல் இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போதும் கூட இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிவந்துள்ளன. அரசு அதிகாரிகள் உள்பட பலருக்கு விடப்பட்ட இந்த மிரட்டல் தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் இந்திய போலீசார் விசாரித்து வருகின்றனர்.