நைரோபி,
கென்யாவில் கடந்த 2024-ம் ஆண்டு கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக 'ஜென்-சி' இளைஞர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக நீதி கேட்கவும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட போராட்டத்தை ஒட்டி, தலைநகர் நைரோபியின் முக்கி யச் சாலைகள் அனைத்தையும் போலீசார் முற்றிலும் முடக்கி 'சீல்' வைத் துள்ளனர். திக்கா மொம்பாசா உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.
நாடாளுமன்றம் மற்றும் அதிபர் மாளிகையைச் சுற்றி முள்கம்பி வேலிகளுடன் கலவரத் தடுப்புப் படைகள், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.